< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
|5 Jun 2022 2:49 AM IST
மதுரையில் பெண்ணிடம் 10 பவுன் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை,
மதுரை சம்மட்டிபுரம் தில்லைநகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 57). சம்பவத்தன்று அந்த பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்து விட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோல் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (66) என்பவர் நடந்து வந்தபோது மர்ம நபர்கள் அவர் வைத்திருந்த செல்போனை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாகவும் எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.