< Back
மாநில செய்திகள்
2 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 10 போலீசார் திடீர் இடமாற்றம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

2 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 10 போலீசார் திடீர் இடமாற்றம்

தினத்தந்தி
|
17 Aug 2022 10:57 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்க்குப்பம், சின்னசேலம் போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்து வந்த 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 10 போலீசார் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர்

கள்ளக்குறிச்சி

கனியாமூர் கலவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கலவரத்தை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து புதிய போலீஸ் சூப்பிரண்டாக பகலவன் பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் கீழ்குப்பம், சின்னசேலம் ஆகிய போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் சாராய விற்பனை நடைபெறுவதாக தகவல் பரவியது.

இதைத் தொடர்ந்து கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 3 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த 3 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், தனிப்பிரிவு போலீஸ்காரர் மற்றும் ஏட்டு என மொத்தம் 10 பேரை அதிரடியாக மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவிட்டார்.

இடமாற்றம்

இதில் கீழ்க்குப்பம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் நந்தகோபால் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கும், ஆறுமுகம் உளுந்தூர்பேட்டைக்கும், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன் கச்சிராயப்பாளையத்துக்கும், ராஜேந்திரன் கள்ளக்குறிச்சிக்கும், கோவிந்தராஜ் திருநாவலூருக்கும், தனிப்பிரிவு போலீஸ்காரர் சேட்டு உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் நாராயணசாமி பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலையத்துக்கும், தேவமூர்த்தி, தேவேந்திரன் மற்றும் ஏட்டு ராபர்ட்ஜான் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்