< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
கதண்டுகள் கடித்து 10 பேர் காயம்
|18 Nov 2022 12:20 AM IST
கதண்டுகள் கடித்து 10 பேர் காயம் அடை்ந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்த வயலூர் கிராம பஸ் நிறுத்தம் அருகே அகரம்சீகூர்-அரியலூர் செல்லும் தார் சாலை ஓரத்தில் உள்ள ஒரு புளிய மரத்தில் கதண்டுகள் கூடுகட்டி உள்ளன. இந்த கதண்டுகள் நேற்று மதியம் திடீரென கலைந்து பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டு இருந்த ஜலாவுதின், மாதசாகிப், இளவரசு, கந்தசாமி, செல்லக்கண்ணு உள்பட 10 பேரை கடித்தன. இதில் காயம் அடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் மாவட்டம், திட்டக்குடி அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கதண்டுகளை அழிக்க தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.