< Back
மாநில செய்திகள்
கைதான 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சிவகங்கை
மாநில செய்திகள்

கைதான 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
23 July 2023 12:15 AM IST

காரைக்குடியில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் கைதான 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

காரைக்குடி,

காரைக்குடியில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் கைதான 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

வாலிபர் கொலை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மைட்டான்பாட்டியை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 32). காரைக்குடியில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக காரைக்குடி தெற்கு போலீஸ் நிலையத்தில் கண்டிஷன் பெயிலில் கையெழுத்திட்டு வந்தார். கடந்த மாதம் 18-ந் தேதி கையெழுத்திட வரும்போது முன் விரோதம் காரணமாக பஸ் நிலையம் அருகில் காரில் வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தது.

இவ்வழக்கில் அறிவழகனின் ஊரை சேர்ந்த மருதுசேனை என்ற அமைப்பின் தலைவர் ஆதி நாராயணன் என்பவர் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்த வழக்கு காரைக்குடி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

குண்டர் சட்டம்

இந்நிலையில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஆதிநாராயணன், தனுஷ், விக்னேஸ்வரன், சேதுபதி, சரவணகுமார், தினேஷ் குமார், செல்வகுமார், ஸ்ரீதர், நவீன் குமார், அஜித்குமார் ஆகிய 10 பேரை தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் அனுமதி பெற்று குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்