< Back
மாநில செய்திகள்
மது விற்ற 10 பேர் கைது
கரூர்
மாநில செய்திகள்

மது விற்ற 10 பேர் கைது

தினத்தந்தி
|
17 Feb 2023 12:00 AM IST

மது விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தாந்தோணிமலையை சேர்ந்த செந்தில் (வயது 36) குளித்தலையை சேர்ந்த பரமேஸ்வரன் (40), மலர்கொடி (38), புதுக்கோட்டையை சேர்ந்த நாகபெருமாள் (32), மண்மங்கலத்தை சேர்ந்த மலர்கொடி (53), குழித்துறையை சேர்ந்த பிச்சாயி (65), சின்னதுரை (47) ரங்கராஜ் (55), முருகன் (44), கழுகூரை சேர்ந்த மாரியம்மாள் (41) ஆகிய 10 பேர் பல்வேறு இடங்களில் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 61 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்