< Back
மாநில செய்திகள்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் லிப்டில் சிக்கிக் கொண்ட மக்கள் - பரபரப்பு காட்சி
மாநில செய்திகள்

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் லிப்டில் சிக்கிக் கொண்ட மக்கள் - பரபரப்பு காட்சி

தினத்தந்தி
|
20 Aug 2022 1:32 PM IST

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் லிப்டில் சிக்கிய பொதுமக்கள் 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் இன்று கூட்டம் ஒன்று நடைபெற்றது. கலெக்டர் அலுவலகத்தின் 2-வது தளத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் கூட்டம் நிறைவடைந்ததும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள லிப்டை பயன்படுத்தி பொதுமக்கள், மற்றும் அதிகாரிகள் உட்பட 10 பேர் கீழ் தளத்திற்கு வர முயன்றனர்.

அப்போது லிப்டில் திடீர் பழுது ஏற்பட்டது. இதனால் தரைத்தளத்திற்கு வந்து நின்ற லிப்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் உள்ளே இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அறிந்த கலெக்டர் அலுவலக அதிகாரிகள் லிப்டின் கதவை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் திறக்க முடியவில்லை.

பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர், லிப்டில் சிக்கி இருந்த பொதுமக்களை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் கரூர் கலெக்டர் அலுவலத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.


மேலும் செய்திகள்