< Back
மாநில செய்திகள்
நாமக்கல் அருகே லாரி மீது பஸ் மோதல்; 10 பேர் காயம்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் அருகே லாரி மீது பஸ் மோதல்; 10 பேர் காயம்

தினத்தந்தி
|
21 Aug 2023 12:15 AM IST

நாமக்கல்லில் இருந்து தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு ஈரோட்டுக்கு நேற்று காலை சென்றது. எர்ணாபுரம் அடுத்த புரசப்பாளையம் பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த நல்லிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்