< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி: தொழிலாளிக்கு 10 மாதம் சிறை
|23 Nov 2022 2:15 AM IST
ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி செய்த தொழிலாளிக்கு 10 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 46). தொழிலாளி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஏலச்சீட்டு நடத்தி பலரிடம் பணம் மோசடி செய்து உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி அண்ணாமலைக்கு 10 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.