< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற  ரூ.10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் - 6 பேர் கைது
மாநில செய்திகள்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் - 6 பேர் கைது

தினத்தந்தி
|
9 Aug 2023 7:06 AM GMT

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கடற்கரையோர பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக 'கியூ' பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் போலீசார் கடற்கரையோர பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது இன்று அதிகாலை வேம்பார் கலைஞானபுரம் கடற்கரையோர பகுதியில் சந்தேகத்திடமாக மினிலாரி மற்றும் படகுடன் 6 பேர் நின்றிருந்தனர். உடனடியாக அங்கு சென்ற போலீசார் படகு மற்றும் மினிலாரியை சோதனை செய்தனர்.

அப்போது சுமார் 40 மூட்டைகளில் பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது. மேலும் அவை தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததும் தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து படகு மற்றும் லோடு ஆட்டோவில் இருந்த பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட சரவணன். மாரியப்பன், லூர்து அந்தோணி, முத்துக்குமார், செந்தூர், சிவபெருமாள் ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்