< Back
மாநில செய்திகள்
சங்கராபுரத்தில் 253 பயனாளிகளுக்கு ரூ.10½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்  கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சங்கராபுரத்தில் 253 பயனாளிகளுக்கு ரூ.10½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்

தினத்தந்தி
|
11 Jun 2022 9:56 PM IST

சங்கராபுரத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் 253 பயனாளிகளுக்கு ரூ.10½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.

சங்கராபுரம்,

சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் கடந்த மாதம் 30-ந் தேதி ஜமாபந்தி தொடங்கியது. இதன் நிறைவு விழா நடைபெற்றது. இதற்கு ஜமாபந்தி வருவாய் தீர்வாய அலுவலரும், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருமான ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதில் பட்டா மாற்றம், பட்டா உட்பிரிவு மாற்றம், நில ஒப்படை கோருதல், குடும்ப அட்டை கோருதல், சமூக பாதுகாப்பு நலத்திட்ட உதவிகள், கணினி திருத்தம், சாதி சான்று, வாரிசு சான்று, முதல் பட்டதாரி சான்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 2,824 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அதன் அடிப்படையில் 253 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 56 ஆயிரத்து 725 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் வேளாண்மை துணை இயக்குனர் சுந்தரம், சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் சையத் காதர், மாவட்ட நில அளவை ஆய்வாளர் நாராயணமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சத்யநாராயணன், தலைமையிடத்து துணை தாசில்தார் மாரியாப்பிள்ளை, ஆதிதிராவிட நல தாசில்தார் நடராஜன், வட்ட வழங்கல் அலுவலர் கமலகண்ணன், சங்கராபுரம் ஒன்றியக் குழு தலைவர் திலகவதிநாகராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணிதாகப்பிள்ளை, மாவட்ட கவுன்சிலர் சுகன்யாசுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் குமாரிபன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்