< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
அரசு ஊழியரிடம் ரூ.10 லட்சம் மோசடி
|1 Oct 2023 2:30 AM IST
அரசு ஊழியரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் வனிதா தேவி (வயது 38). அரசு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மதுரையில் நிதி நிறுவனம் நடத்தி வரும் ஹரிஹரன், இளங்கோ, கலா ஆகியோர் பழக்கமாகி உள்ளனர். இதனை தொடர்ந்து, நிதி நிறுவனத்தில் பண முதலீடு செய்தால், கூடுதல் பணம் தருவதாக அவர்கள் ஆசைவார்த்தை கூறினர். இதனை நம்பிய வனிதா தேவி பல தவணைகளாக ரூ.10 லட்சத்து 17 ஆயிரம் வரை, அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். ஆனால், அவர்கள் கூறியபடி பணம் கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து, எஸ்.எஸ்.காலனி போலீசில் வனிதாதேவி புகார் அளித்தார். புகாரின் பேரில் இளங்கோ, ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.