சென்னை
சென்டிரல் ரெயில் நிலையத்தில் 10 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது
|சென்டிரல் ரெயில் நிலையத்தில் 10 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் இன்ஸ்பெக்டர் ரோகித் குமார் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த அவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் 4-வது நடைமேடையில் நின்றது.
அந்த ரெயிலில் இருந்து சந்தேகப்படும்படியாக வந்திறங்கிய 3 பேரை பிடித்து, அவர்களிடம் இருந்த பைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் பைகளில் சுமார் 10 கிலோ எடையுள்ள போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் நாயக் (25) மற்றும் 18 வயது சிறுவர்கள் 2 பேர் என்பது தெரிந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த போதை பொருட்களை போதைபொருள் தடுப்பு பிரிவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.