< Back
மாநில செய்திகள்
குடற்புழு நீக்க முகாமில் மாத்திரை சாப்பிட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 10 பேருக்கு வாந்தி
கரூர்
மாநில செய்திகள்

குடற்புழு நீக்க முகாமில் மாத்திரை சாப்பிட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 10 பேருக்கு வாந்தி

தினத்தந்தி
|
15 Feb 2023 12:38 AM IST

கரூரில் நடைபெற்ற குடற்புழு நீக்க முகாமில் மாத்திரை சாப்பிட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 10 பேருக்கு வாந்தி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடற்புழு நீக்க முகாம்

கரூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் அனைத்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி கரூர் ராயனூர் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மொத்தம் 184 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், இந்த மாத்திரையை சாப்பிட்ட 6 மாணவிகள், 4 மாணவர்கள் என மொத்தம் 10 பேருக்கு திடீரென வாந்தி ஏற்பட்டுள்ளது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதையடுத்து மாணவ-மாணவிகளை மீட்டு காந்தி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், ஒவ்வாமை காரணமாகவே மாணவ-மாணவிகளுக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

குடற்புழு நீக்க முகாமில் மாத்திரை சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு வாந்தி ஏற்பட்ட சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்