< Back
மாநில செய்திகள்
திருமணமான 10 நாளில் இளம்பெண் தற்கொலை - சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

திருமணமான 10 நாளில் இளம்பெண் தற்கொலை - சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார்

தினத்தந்தி
|
3 May 2024 9:17 PM IST

மதுரை மேலூர் அருகே திருமணமான 10 நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை,

மதுரை மேலூர் அடுத்துள்ள தும்பைப்பட்டி லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சினேகா. 19 வயதேயான இவருக்கும் கோவில்பட்டியை சேர்ந்த மகேஷ் என்பவருக்கும் கடந்த 20-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. கோவில்பட்டியில் உள்ள கணவரின் வீட்டில் வசித்து வந்த சினேகா, திடீரென வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருமணமான 10 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்