< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10% போனஸ் - தமிழக அரசு
|7 Nov 2023 7:17 PM IST
கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.போனஸ் திட்டத்தின் கீழ் வராத தலைமை சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.3000 வழங்கப்படும்.தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.2,400 கருணைத் தொகையாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் 44,270 பணியாளர்களுக்கு ரூ.28 கோடியே ஒரு லட்ச ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.