கன்னியாகுமரி
தொழிலாளிக்கு 1½ ஆண்டு சிறை
|ஆரல்வாய்மொழி அருேக பெண்ணை தாக்கிய தொழிலாளிக்கு 1½ ஆண்டு சிறை தண்டனை விதித்து பூதப்பாண்டி கோர்ட்டு உத்தரவிட்டது.
அழகியபாண்டியபுரம்,
ஆரல்வாய்மொழி அருேக பெண்ணை தாக்கிய தொழிலாளிக்கு 1½ ஆண்டு சிறை தண்டனை விதித்து பூதப்பாண்டி கோர்ட்டு உத்தரவிட்டது.
பெண் மீது தாக்குதல்
ஆரல்வாய்மொழி அருகே உள்ள குருக்கள்மடம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டெல்லா. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த சிவராஜா (வயது55) என்ற தொழிலாளிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக அவர்கள் இடைேய அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சிவராஜன், ஸ்டெல்லாவிடம் தகராறு செய்து தகாத வார்த்தைகள் பேசி அவரை தாக்கினார். இதில் ஸ்டெல்லா காயமடைந்தார்.
இதுகுறித்து அவர் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை பூதப்பாண்டி கோர்ட்டில் நடந்து வந்தது.
1½ ஆண்டு சிறை
வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பு அளித்தார். அதில் சிவராஜனுக்கு 1½ ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.10 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பெண்ணை தாக்கிய தொழிலாளிக்கு 1½ ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பால் பூதப்பாண்டி கோர்ட்டில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.