< Back
மாநில செய்திகள்
1¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

1¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தினத்தந்தி
|
10 Dec 2022 12:30 AM IST

திண்டுக்கல் அருகே வேன்களில் கடத்திய 1¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வடமதுரை-வேடசந்தூர் சாலையில் தென்னம்பட்டி பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை போலீசார் நிறுத்தினர். போலீசாரை கண்டதும் சாலையோரத்தில் வேனை நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து போலீசார் அந்த வேனை சோதனை செய்ததில், 1¼ டன் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் தப்பியோடியவர், வடமதுரையை அடுத்த பிலாத்து பகுதியை சேர்ந்த கெங்கமநாயுடு என்பது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதேபோல் திண்டுக்கல்-திருச்சி சாலையில் வேல்வார்கோட்டை பிரிவு பகுதியில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் வேனில் 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த வடமதுரையை அடுத்த பிலாத்து பகுதியை சேர்ந்த விவசாயி முனியாண்டி (வயது 30) என்பவரை கைது செய்தனர். மேலும் வேன், ரேஷன் அரிசி ஆகிய பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்