< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
மின்சார ரெயிலில் 1½ டன் ரேஷன் அரிசி சிக்கியது
|30 Jun 2023 4:31 PM IST
கும்மிடிப்பூண்டி அருகே மின்சார ரெயிலில் 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றினர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தில் வட்ட வழங்கல் அதிகாரி பாலாஜி தலைமையில் வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் அந்த வழியாக செல்லும் ரெயில்களில் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையில் இருந்து கவரைப்பேட்டை வழியாக ஆந்திரா நோக்கி சென்ற மின்சார ரெயிலில் சோதனை செய்யும்போது கேட்பாரற்று கிடந்த 1½ டன் ரேஷன் அரிசி மூட்டைகளை கண்டுபிடித்தனர். போலீசார் அவற்றை மீட்டு ரெயிலில் ரேஷன் அரிசியை கடத்தியவர்கள் யார் என்பதை தேடி வருகின்றனர்.