< Back
மாநில செய்திகள்
மூதாட்டியிடம் 1½ பவுன் சங்கிலி பறிப்பு
கரூர்
மாநில செய்திகள்

மூதாட்டியிடம் 1½ பவுன் சங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
8 Dec 2022 12:35 AM IST

மூதாட்டியிடம் 1½ பவுன் சங்கிலி பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தரகம்பட்டி அருகே உள்ள ராயப்பகவுண்டனூரை சேர்ந்தவர் அழகம்மாள் (வயது 80). இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் தனியாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் அழகம்மாள் அணிந்திருந்த 1½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அழகம்மாள் திருடன், திருடன்... என சத்தம் போட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்த உறவினர்கள் ஓடி வந்தனா். அதற்குள் மர்மநபர் சங்கிலியுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து அழகம்மாளின் உறவினர் தண்டபாணி கொடுத்த புகாரின்பேரில், பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து, தங்கசங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்