< Back
மாநில செய்திகள்
நர்ஸ் வேலை வாங்கி தருவதாக ஆன்லைன் மூலம் ரூ.1½ லட்சம் மோசடி- சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

நர்ஸ் வேலை வாங்கி தருவதாக ஆன்லைன் மூலம் ரூ.1½ லட்சம் மோசடி- சைபர் கிரைம் போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
2 Nov 2022 6:37 PM GMT

நர்ஸ் வேலை வாங்கி தருவதாக ஆன்லைனில் ரூ.1.40 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


நர்ஸ் வேலை வாங்கி தருவதாக ஆன்லைனில் ரூ.1.40 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நர்ஸ் வேலை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சி.கே.மங்கலத்தை சேர்ந்தவர் போஸ். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 23). இவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு வேலைவாய்ப்பு இணையதளத்தில் வேலைக்காக பதிவு செய்து வைத்திருந்தார்.

இந்த நிலையில் நர்ஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும், விவரங்களை அனுப்புமாறு கேட்டு இவருக்கு ஒரு நிறுவனத்தின் பெயரில் மெயில் அனுப்பியுள்ளனர். அதன் பின்பு பிரியதர்ஷினியை வேலைக்கு தேர்வு செய்து விட்டதாகவும், நல்ல சம்பளம் கிடைக்கும் என்றும் அதற்கு சில விதிமுறைகள் உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

அவர்கள் தெரிவித்த விதிமுறைபடி கொடுக்கப்பட்ட வங்கி கணக்கு எண்ணிற்கு பிரியதர்ஷினி தனது உறவினரான மதன் என்பவரது வங்கி கணக்கில் இருந்து 2 தவணையாக முதலில் ரூ.57,400 மற்றும் ரூ.82,979 என மொத்தம் ரூ.1,40,379 அனுப்பி வைத்துள்ளார்.

புகார்

ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட நபர்கள் மீண்டும் சில காரணங்களை குறிப்பிட்டு மேலும் ரூ.1,08,517-ஐ அனுப்பி வைக்கும்படி கேட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த பிரியதர்ஷினி இவ்வளவு பணம் தன்னால் அனுப்ப முடியாது. தனக்கு வேலை வேண்டாம் என்று குறிப்பிட்டு பணத்தை திருப்பி தருமாறு கேட்டு மெயில் அனுப்பி உள்ளார்.

ஆனால் தொடர்ந்து எந்தவிதமான தகவலும் தெரிவிக்காமல் காலம் தாழ்த்திய காரணத்தினால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரியதர்ஷினி ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசிற்கு ஆன்லைன் மூலம் புகார் செய்தார். புகாரின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்