< Back
மாநில செய்திகள்
ரூ.1½ லட்சம் மளிகை பொருட்கள் மோசடி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ரூ.1½ லட்சம் மளிகை பொருட்கள் மோசடி

தினத்தந்தி
|
13 Jun 2023 6:45 PM GMT

ரூ.1½ லட்சம் மளிகை பொருட்கள் மோசடி


ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் மளிகை சாமான்கள் விற்பனை செய்யும் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இந்த கடையில் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை வடக்குத்தெருவை சேர்ந்த பொன்னுச்சாமி மனைவி விஜயசுதா (வயது 34) என்பவர் பில்போடும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது தங்கையான சின்னையா மகள் பவானி(30) என்பவரை கடைக்கு வரச்சொல்லி வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்களை குறைந்த விலைக்கு பில் போட்டு கொடுத்து அனுப்பிள்ளார். இதேபோன்று வாட்ஸ்-அப்பில் தங்கையை தகவல் கூறி ஆட்கள் குறைவாக உள்ள நேரம் பார்த்து வந்ததும் அதிகள அளவிலான மளிகை சாமான்களை கொடுத்து அனுப்பி சிறிதளவு பொருட்கள் வாங்கியதுபோன்று பில் போட்டு அனுப்பி வைத்துள்ளார். இதனால் கடையில் உள்ளவர்கள் சந்தேகப்பட்டு விசாரித்தபோது விஜயசுதா மறுத்துள்ளார். உடனடியாக சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது விஜயசுதா இதுபோன்று அடிக்கடி கடையில் உள்ள மளிகை சாமான்களை கொடுத்து அனுப்பியது தெரிந்தது. அந்த நேரங்களின் அடிப்படையில் போடப்பட்ட பில்களை கணக்கிட்டபோது ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 735 மதிப்பிலான மளிகை சாமான்களை தான் வேலை பார்த்த கடையில் எடுத்து தங்கையிடம் கொடுத்து அனுப்பியது தெரிந்தது.. இதனை தொடர்ந்து விஜயசுதா மற்றும் அவரின் தங்கை பவானி ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்