< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
தக்கலை அருகே அதிக பாரம் ஏற்றி வந்த 4 லாரிகளுக்கு ரூ.1¼ லட்சம் அபராதம்
|11 Jan 2023 11:31 PM IST
தக்கலை அருகே அதிக பாரம் ஏற்றி வந்த 4 லாரிகளுக்கு ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தக்கலை, ஜன.12-
தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தக்கலை பழைய பஸ் நிலையம் வழியாக கேரளாவுக்கு ஜல்லி, பாறை, மணல் ஏற்றி வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் அனுமதிக்கப்பட்ட எடையை விட அதிக பாரம் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிக பாரம் ஏற்றி வந்த 4 லாரிகளை போலிசார் பறிமுதல் செய்து தக்கலை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
அதைத்தொடர்ந்து லாரிகளுக்கு தனித்தனியாக அபராதம் விதிக்கப்பட்டது அந்த வகையில் 4 லாரிகளுக்கும் மொத்தம் ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.