< Back
மாநில செய்திகள்
பொக்லைன் ஆபரேட்டரை மிரட்டி ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் பறிப்பு
கரூர்
மாநில செய்திகள்

பொக்லைன் ஆபரேட்டரை மிரட்டி ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் பறிப்பு

தினத்தந்தி
|
9 March 2023 12:05 AM IST

கரூர் அருகே பொக்லைன் ஆபரேட்டரை மிரட்டி ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் பறித்து சென்ற 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரூ.1 லட்சம் பறிப்பு

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள திருத்தலையூர் குடித்தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 37). பொக்லைன் ஆபரேட்டர். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கரூர் திருக்காம்புலியூர் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தகாதவார்த்தையால் திட்டினர்.

பின்னர் ராமசாமியை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்தை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் 4 பேரும் பணத்துடன் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

போலீசார் வலைவீச்சு

இதுகுறித்து ராமசாமி கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து, பணத்தை பறித்து சென்ற 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்