< Back
மாநில செய்திகள்
என்ஜினீயரிங் படிப்புகளில் சேர 1 லட்சத்து 31 ஆயிரம் பேர் விண்ணப்பம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

என்ஜினீயரிங் படிப்புகளில் சேர 1 லட்சத்து 31 ஆயிரம் பேர் விண்ணப்பம்

தினத்தந்தி
|
15 May 2024 12:26 AM IST

என்ஜினீயரிங் படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கு அடுத்த மாதம் 6-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

சென்னை,

என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 6-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, முதல் நாளில் 20 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், தினமும் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் விண்ணப்பப் பதிவு தொடங்கி 9 நாட்கள் கடந்த நிலையில் நேற்று மாலை வரையிலான புள்ளி விவரங்களின்படி, ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 50 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில் 80 ஆயிரத்து 955 பேர் விண்ணப்பத்துக்கான கட்டணத்தையும், அவர்களில் 46 ஆயிரத்து 528 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தும் உள்ளனர். விண்ணப்பிப்பதற்கு அடுத்த மாதம் (ஜூன்) 6-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

மேலும் செய்திகள்