< Back
மாநில செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் 1½ கி.மீ. தூரம் அணிவகுத்து நின்ற கார்கள்
சென்னை
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 1½ கி.மீ. தூரம் அணிவகுத்து நின்ற கார்கள்

தினத்தந்தி
|
10 Dec 2022 11:40 AM IST

சென்னை விமான நிலையத்தில் 1½ கி.மீ. தூரம் அணிவகுத்து நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த 4-ந் தேதி முதல் 6 அடுக்கு 'மல்டிலெவல் கார் பார்க்கிங்' செயல்பாட்டுக்கு வந்தது. இதனை செயல்படுத்தும் முறையை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. விமான நிலையத்துக்குள் வாகனங்கள் நுழைவு வாயில் அருகே கட்டண சாவடிகள் அமைத்து வாகனங்கள் நுழையும் நேரத்தை கணக்கிட்டு டோக்கன் வழங்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் அதிகாலையில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையத்தில் அதிக விமான சேவைகள் இருக்கும். புயல் காரணமாக பலத்த மழையால் விமானத்தை தவற விடக்கூடாது என்பதால் நேற்று அதிகளவிலான வாகனங்கள் விமான நிலையம் வந்தன. பயணிகளை இறக்கி விட்ட பிறகு அந்த வாகனங்கள் வெளியேற செல்லும்போது பணம் செலுத்துமிடத்தில் நீண்டநேரம் நிற்க வேண்டிய சூழல் எழுந்தது.

இதனால் சுங்கச்சாவடியில் இருந்து புறப்பாடு முனையம் வரை சுமார் 1½ கி.மீ. தூரம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. கட்டண சாவடிகளில் சற்று தாமதம் ஏற்பட்டால் கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடும். இதனால் வாகனங்கள் விரைவாக வெளியேற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிரைவர்கள், வாகனங்களின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்