< Back
மாநில செய்திகள்
1 கிலோ தங்கம், ரூ.2 கோடி கொள்ளை மேலும் ஒருவர் சிக்கினார்
சிவகங்கை
மாநில செய்திகள்

1 கிலோ தங்கம், ரூ.2 கோடி கொள்ளை மேலும் ஒருவர் சிக்கினார்

தினத்தந்தி
|
30 March 2023 12:04 AM IST

1 கிலோ தங்கம், ரூ.2 கோடி கொள்ளை மேலும் ஒருவர் சிக்கினார்

காரைக்குடி

காரைக்குடி முத்துப்பட்டணம் சோமு தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 46). இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு காரைக்குடி நகை வியாபாரிகளுக்காக சென்னையிலிருந்து 1 கிலோ நகைகள் மற்றும் ரூ.2 கோடியை பெற்றுக் கொண்டு ஆம்னி பஸ்சில் காரைக்குடி வந்தார். கழனிவாசல் பஸ் நிறுத்ததில் இறங்கும் போது அடையாளம் தெரியாத 3 பேர் காரில் வந்து இவரை நகை மற்றும் பணத்தோடு காரில் வலுக்கட்டாயமாக கடத்திச்சென்று பணம், நகைகள் மற்றும் செல்போனை பறித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி சென்னையைச் சேர்ந்த 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகைகளை மீட்டனர். மேலும் இந்த வழக்கில் சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த சரவணன்(36) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்