< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
பொள்ளாச்சி அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்-வாலிபர் சிக்கினார்
|28 Sept 2023 12:30 AM IST
பொள்ளாச்சி அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்-வாலிபர் சிக்கினார்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கோமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்ற ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்ததில், அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் மாப்பிள்ளைகவுண்டன்புதூரை சேர்ந்த காளீஸ்வரன் (வயது 22) என்பதும், விற்பனை செய்வதற்கு கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.