திருப்பத்தூர்
ரூ.1½ கோடியில் சாலை அமைக்கும் பணி
|வாணியம்பாடி நகராட்சி பகுதியில் ரூ.1½ கோடியில் சாலை அமைக்கும் பணியை நகரமன்ற தலைவர் ஆய்வு செய்தார்.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல சாலைகள் பழுதடைந்து இருப்பதாகவும் இதனை உடனடியாக மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததனர். மேலும் நகரமன்ற கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் இதே கருத்தை முன் வைத்தனர்.
இதையடுத்து வாணியம்பாடியில் பழுதடைந்து மறு சீரமைப்பு செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் சாலைகளின் விவரம் சேகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக பழுதடைந்த 16 வார்டு பகுதிகளில் உள்ள சாலைகளை மறுசீரமைப்பு செய்யும் பணிக்கு 15-வது நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.1½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முதல் கட்டமாக 16-வது வார்டு பகுதியில் சாலை மறு சீரமைப்பு செய்யும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது. இந்த பணிகளை நகரமன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன், வாணியம்பாடி நகர கூட்டுறவு வங்கி தலைவரும், நகர மன்ற உறுப்பினருமான வி.எஸ்.சாரதிகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது நகரமன்ற உறுப்பினர் பத்மாவதி, ஆர்.சிரஞ்சீவிகுமார், நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.