< Back
மாநில செய்திகள்
மீனவர்கள் நலன் காக்க ரூ.1 கோடி மதிப்பில் சுழல் நிதி உருவாக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு
மாநில செய்திகள்

மீனவர்கள் நலன் காக்க ரூ.1 கோடி மதிப்பில் சுழல் நிதி உருவாக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

தினத்தந்தி
|
29 Sept 2023 5:00 PM IST

மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.1 கோடி சுழல் நிதியாக உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை, இயற்கை சீற்றங்கள் ஆகியவற்றால் உயிரிழந்த, காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.1 கோடி சுழல் நிதியாக உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை செயலாளர் பிறப்பித்துள்ளார்.

இதன்படி கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை கடலில் காணாமல் போன 25 மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மீனவக்குடும்பங்கள் வறுமையில் வாடி வரும் நிலையில், மீனவர்களின் நலன் காக்க தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்