சிவகங்கை
சிவகங்கை நகரில் ரூ.1½ கோடியில் திட்டப்பணிகள்
|சிவகங்கை நகரில் ரூ.1½ கோடியில் முடிவுற்ற 3 திட்டப்பணிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
சிவகங்கை
சிவகங்கை நகரில் ரூ.1½ கோடியில் முடிவுற்ற 3 திட்டப்பணிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
திட்டப்பணிகள்
சிவகங்கை கோர்ட்டு வாசலில் உள்ள ராமச்சந்திரனார் பூங்கா ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. செக்கடி ஊருணி கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது. அரண்மனை வாசலில் உள்ள சண்முகராஜா கலையரங்கம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பணிகள் முடிவடைந்து அவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் தலைமையில், சிவகங்கை நகரசபை தலைவர் துரைஆனந்த் மற்றும் மானாமதுரை ெதாகுதி தமிழரசி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நகரசபை ஆணையாளர் அப்துல்ஹரீஸ் வரவேற்று பேசினார். விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
ஊருணிகள் சீரமைப்பு
அப்போது அவர் பேசியதாவது:- சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 46 வளர்ச்சி திட்ட பணிகள் ரூ. 22 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. செக்கடி ஊருணியில் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் பயன்பெறும் வகையில் படகு போக்குவரத்து தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, சுயமரியாதை இயக்க தலைவர் ராமச்சந்திரனாரின் பேரன் வக்கீல் இன்பலாதன், கே.ஆர்.மேல்நிலை பள்ளி தமிழாசிரியா் இளங்கோ, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர்மன்ற உறுப்பினர் அயூப்கான் நன்றி கூறினார்.