< Back
மாநில செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் ரூ.1¾ கோடி தங்கம் பறிமுதல்
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1¾ கோடி தங்கம் பறிமுதல்

தினத்தந்தி
|
16 Oct 2023 2:20 AM IST

சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 73 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 970 கிராம் தங்கத்தை வருவாய் புலனாய்வு பரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து விமானத்தில் வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

ரூ.1¾ கோடி தங்கம் பறிமுதல்

அப்போது மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த 2 வாலிபர்களை மடக்கி சோதனை செய்தனர். அவர்களது சீருடைகளில் ரகசிய அறைகள் வைத்து அதில் தங்கத்தை பேஸ்ட் போல் மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

2 பேரிடம் இருந்தும் ரூ.1 கோடியே 73 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 970 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரையும் கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், மேலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்