< Back
மாநில செய்திகள்
சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு

தினத்தந்தி
|
23 Feb 2023 12:15 AM IST

கள்ளக்குறிச்சி பகுதியில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். துணை தலைவர் விமலா முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 46 ஊராட்சிகளில் சிமெண்டு சாலை, வடிகால் வாய்க்கால் அமைத்தல், பள்ளி கட்டிடம், அங்கன்வாடி மையம், சமையலறை சீரமைப்பு, ஏரியை மேம்படுத்துதல், சிறுபாலம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுக்காக ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இ்தில் ஒன்றிய கவுன்சிலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மேலாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்வதி நன்றி கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்