சேலம்
கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி விற்பனை
|ஏலத்தில் வெள்ளை ரக எள் கிலோ ரூ.166.50 முதல் ரூ.171.50 வரையிலும், சிவப்பு ரக எள் கிலோ ரூ.137 முதல் ரூ.179.40 வரையிலும் விற்பனை ஆனது.
எடப்பாடி:-
கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் நேற்று பொது ஏலம் நடந்தது. இதில் ரூ.1 கோடியே 60 லட்சத்தில் பருத்தி விற்பனை நடந்தது. இந்த பொது ஏலத்தில் சேலம் மட்டும் அல்லாமல் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் சுமார் 6 ஆயிரம் மூட்டைகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அவை 900 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு கூட்டுறவு துறை அலுவலர்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.
இதில் பி.டி.ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ.6 ஆயிரத்து 50 முதல் ரூ.7 ஆயிரத்து 21 வரையிலும் விற்பனை ஆனது. பின்னர் நடந்த எள்ளுக்கான பொது ஏலத்தில் வெள்ளை ரக எள் கிலோ ரூ.166.50 முதல் ரூ.171.50 வரையிலும், சிவப்பு ரக எள் கிலோ ரூ.137 முதல் ரூ.179.40 வரையிலும் விற்பனை ஆனது. இந்த சங்கத்தில் நடந்த பொது ஏலம் மூலம் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பிலான பருத்தியும், ரூ.7 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான எள்ளும் விற்பனையானது. எள் மற்றும் பருத்திக்கு கூடுதல் விலை கிடைத்ததாக ஏலத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தெரிவித்தனர்.