< Back
மாநில செய்திகள்
ராமேசுவரம் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் காணிக்கை
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ராமேசுவரம் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் காணிக்கை

தினத்தந்தி
|
28 Sept 2023 12:15 AM IST

ராமேசுவரம் கோவிலில் கடந்த மாதம் ரூ.1¼ கோடிக்கு உண்டியல் காணிக்கை கிடைத்தது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் நேற்று திறந்து எண்ணப்பட்டது. கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தலைமையில் உண்டியல் பணம் எண்ணும் பணியானது நடைபெற்றது. இதில் கடந்த ஒரு மாத உண்டியல் வருமானமாக ரூ.1 கோடியே 39 லட்சத்து 22 ஆயிரத்து 935-ம், தங்கம் 216 கிராம் 200 மில்லி கிராமும், வெள்ளி 9 கிலோ 515 கிராமும் இருந்துள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்