விருதுநகர்
1 ஏக்கர் அரசு நிலம் மீட்பு
|தாசில்தார் நடவடிக்கையின் பேரில் 1 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது.
சிவகாசி,
சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட கீழதிருத்தங்கல் கிராமத்தில் உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 1 ஏக்கர் இடத்தை தனிநபர் ஒருவர் வேலி அமைத்து வைத்திருப்பதாக அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகாசி தாசில்தார் லோகநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் மண்டல துணை தாசில்தார் கார்த்திக்ராஜ், சர்வேயர் சுப்புராஜ், வருவாய் ஆய்வாளர் ஆரோக்கியபிரபாகரன், கிராம நிர்வாக அலுவலர் சங்கிலிபிரபு ஆகியோருடன் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் அரசுக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலம் தனிநபர் பாதுகாப்பில் இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த வேலியை வருவாய்த்துறையினர் மணல் அள்ளும் எந்திரம் கொண்டு அகற்றினர்.