< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
மின்னல் தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி
|9 Feb 2023 1:11 AM IST
மின்னல் தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
அருமடல் வடக்கு தெருவை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மனைவி அலமேலு (வயது 37). இவர் கடந்த 3-ந்தேதி மாலை வயலில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது பலத்த மழை பெய்தது. அலமேலு மழைக்காக அருகே உள்ள புளியமரத்தடியில் ஒதுங்கி நின்றார். திடீரென்று மின்னல் தாக்கி அலமேலு சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதைத்தொடர்ந்து அலமேலுவின் வாரிசுதாரர்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து மொத்தம் ரூ.4 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.