< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
சாராயம், மது விற்ற 3 பேர் கைது
|23 April 2023 11:12 PM IST
ஆம்பூர் பகுதியில் சாராயம், மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆம்பூரை அடுத்த உமராபாத் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரின் பேரில், தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவலாபுரம் பகுதியில் தார்வழி பகுதியை சேர்ந்த அனில்குமார் (வயது 24) என்பவரும், பெரியவரிக்கம் பகுதியில் அதேப் பகுதியை சேர்ந்த ராஜா (40) என்பவரும் சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதேபோல் தேவலாபுரம் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த அசோகன் (52) என்பவர் அரசு மது பாட்டில் விற்பனை செய்தார்.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் தனிப்படை போலீசார் பிடித்து உமராபாத் போலீசில் ஒப்படைத்தனர். உமராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 150 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.