திருச்சி
திருநங்கையை கொலை செய்ய முயன்ற 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|2 people who tried to kill a transgender were charged with thug law
திருச்சி-சென்னை பைபாஸ்ரோட்டில் சஞ்சீவிநகர் அருகே ஒரு ஓட்டல் முன்பு கடந்த மாதம் 16-ந் தேதி நின்று கொண்டு இருந்த திருநங்கையை பாலியல் தொழிலுக்கு அழைத்து வரமறுத்ததால் கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, வீரமணி (வயது 22), நாகராஜ் (24) ஆகியோரை கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் வீரமணி மீது கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கும், திருநங்கையிடம் செல்போன் பறிக்க முயன்ற வழக்கும் உள்ளது.நாகராஜ் மீது கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கு, திருநங்கையிடம் பணம் மற்றும் செல்போன் பறிக்க முயன்ற வழக்கு, கொலை முயற்சி வழக்கு உள்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. எனவே இவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு வீரமணி, நாகராஜ் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 2 பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.