< Back
மாநில செய்திகள்
பாசன தேவை அதிகரிப்பு: மேட்டூர் அணையில் நீர்திறப்பு வினாடிக்கு 13,000 கனஅடியாக அதிகரிப்பு
மாநில செய்திகள்

பாசன தேவை அதிகரிப்பு: மேட்டூர் அணையில் நீர்திறப்பு வினாடிக்கு 13,000 கனஅடியாக அதிகரிப்பு

தினத்தந்தி
|
27 Jun 2023 2:42 PM IST

டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்ததால், நேற்று நீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியில் இருந்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாசன தேவை மேலும் அதிகரித்துள்ளதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. தற்போது நீர் திறப்பு வினாடிக்கு 11 ஆயிரம் கன அடியில் இருந்து 13 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்