< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
220 கிலோ கடல் அட்டை பறிமுதல்; 4 பேர் கைது
|31 May 2023 12:15 AM IST
220 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் சேரான்கோட்டை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனபாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து வனபாதுகாப்பு படை மற்றும் கடல் சார் உயர் இலக்கு படை மற்றும் வனவேட்டை தடுப்பு பிரிவினர் இணைந்து சேரான்கோட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சேரான் கோட்டை கடற்கரை அருகே காட்டு கருவேல செடிகள் உள்ள பகுதியில் பதப்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 220 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து ராமேசுவரம் பகுதியை சேர்ந்த சேதுராம், ராமச்சந்திரன், தங்கசாமி, குழந்தைவேலு ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.