< Back
மாநில செய்திகள்
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
12 March 2023 12:15 AM IST

பாம்பன்விளை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

ராஜாக்கமங்கலம்,

ஆசாரிபள்ளம் பாம்பன்விளை அருகே உள்ள பருத்திவிளையை சேர்ந்தவர் மனோகரன் (வயது59), தேங்காய் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

மனைவி இறந்த சோகத்தில் மனோகரன் மனநிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்புற்ற மனோகரன் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்