< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மகா சிவராத்திரி விழா
|14 Feb 2023 12:15 AM IST
சீர்காழி தென்பாதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மகா சிவராத்திரி விழா நடந்தது.
திருவெண்காடு:
சீர்காழி தென்பாதியில் ராஜராஜேஸ்வரி என்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் கொடி ஊர்வலமும் தொடர்ந்து அபிஷேகம் ஆராதனையும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான மயான சூறை நிகழ்வு மகா சிவராத்திரியை முன்னிட்டு 18-ந் தேதி(சனிக்கிழமை) இரவு நடைபெற உள்ளது. அன்று காலையில் தேர்பவனி, அலகு காவடிகள் ஊர்வலமும் மாலை பெண்கள் மாவிளக்கு போடுதலும் தொடர்ந்து மயான சூரை நிகழ்வும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.