< Back
மாநில செய்திகள்
காவிரி ஆற்றில் வீசப்பட்ட வாலிபர் உடல் மீட்பு
திருச்சி
மாநில செய்திகள்

காவிரி ஆற்றில் வீசப்பட்ட வாலிபர் உடல் மீட்பு

தினத்தந்தி
|
16 Nov 2022 1:57 AM IST

Body of teenager thrown into Cauvery river recovered

மலைக்கோட்டை:

திருச்சி இ.பி.ரோடு அந்தோணியார் கோவில் தெரு பகுதி சேர்ந்தவர் நாகூரான் என்ற நாகூர்மீரான்(வயது 29). இவரை முன்விரோதம் காரணமாக சம்பவத்தன்று பட்டர்வொர்த் ரோட்டை சேர்ந்த சண்டி என்ற சக்திவேல் உள்ளிட்ட 4 பேர் கடத்தி சென்று, அடித்து கொலை செய்து சிந்தாமணி ஓடத்துறை ரெயில்வே பாலத்தின் மேல் இருந்து காவிரி ஆற்றில் உடலை வீசி உள்ளனர்.

இது குறித்து அவரது தங்கை தாஜ்நிஷா கொடுத்த புகாரின்பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் கடந்த 3 நாட்களாக நாகூர் மீரானின் உடலை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று இரவு திருவெறும்பூர் பகுதிக்கு உட்பட்ட வேங்கூர் அருகே காவிரி ஆற்றின் கரை ஓரமாக நாகூர் மீரானின் உடல் கரை ஒதுங்கியிருந்தது, போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்