< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை செத்தது
|16 Nov 2022 1:03 AM IST
சங்கராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை செத்தது.
சங்கராபுரம்,
கல்வராயன்மலை செங்கம்பட்டு வனப்பகுதியில் இருந்து காட்டெருமை ஒன்று வெளியேறியது. இந்த காட்டெருமை சங்கராபுரம் அருகே உள்ள மூலக்காடு கிராமத்தை சேர்ந்த நடேசன் மகன் குமரேசன் என்பவரது விவசாய கிணற்றில் தவறி விழுந்து செத்தது. இதுகுறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கயிறு மூலம் காட்டெருமையின் உடலை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அதனை கால்நடை மருத்துவர் மூலம் உடற் கூறாய்வு செய்தனர். பின்னர் உடலை வனத்துறையினர் புதைத்தனர்.