< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
|16 Nov 2022 12:15 AM IST
குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து குறைந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்தது. நேற்று அதிகாலை 3 மணி முதல் 4.30 மணி வரை மழை வெளுத்து வாங்கியது. பகல் முழுவதும் வெயில் அடித்தது. குற்றாலம் மெயின் அருவியில் நேற்று முன்தினம் இரவு நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று காலையிலும் நீர்வரத்து குறையாததால் மெயின் அருவியில் குளிக்க தடை தொடர்ந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவியில் குளித்து சென்றனர். இதையடுத்து மாலையில் நீர்வரத்து குறைந்ததால் மெயின் அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் அங்கு வந்தவர்கள் மெயின் அருவியில் குளித்துச்சென்றனர்.