< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தம்பதி
தேனி
மாநில செய்திகள்

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தம்பதி

தினத்தந்தி
|
16 Nov 2022 12:15 AM IST

A couple tried to commit suicide by drinking poison

நுரையீரல் பாதிப்பு

தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபலன் கோவில் தெருவை சேர்ந்தவர் காமாட்சியப்பன் (வயது 83). விவசாயி. இவரது மனைவி தவமணி (76). இவர்களுக்கு ரவி (49), சிவக்குமார் (45) என 2 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி தனித்தனியே அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். காமாட்சியப்பன் தனது மனைவியுடன் அதே தெருவில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் தவமணிக்கு, கடந்த 2019-ம் ஆண்டு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் 3 மாதத்திற்கு ஒரு முறை மதுரைக்கு சென்று சிகிச்சை பெற்றார். கடந்த 6 மாதங்களாக மதுரைக்கு செல்லாமல் கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தவமணி மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் மீண்டும் தவமணிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து தவமணியை அவரது குடும்பத்தினர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

விஷம் குடித்தனர்

கடந்த வாரம் ஆஸ்பத்திரியில் இருந்து தவமணி வீடு திரும்பினார். அதன் பின்பு மூச்சு விடுவதற்கு சிரமம் இருப்பதாக தனது கணவரிடம் அவர் கூறியுள்ளார். இதனால் கணவன்-மனைவி இருவரும் மனவிரக்தியில் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் தம்பதியினர் விஷம் (பூச்சிக்கொல்லி மருந்து) குடித்து மயங்கி விழுந்தனர்.அப்போது அங்கு வந்த மகன் ரவி அதிர்ச்சிடையந்தார்.

கணவர் சாவு

உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி காமாட்சியப்பன் பரிதாபமாக இறந்தார்.

தவமணியை மேல்சிகிச்சைக்காக தேனி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் கணவர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்