< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நாளை நடக்கிறது
|16 Nov 2022 12:15 AM IST
Farmers Grievance Meeting
விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். எனவே இக்கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர், கண்டாச்சிபுரம் ஆகிய தாலுகாக்களுக்குட்பட்ட அனைத்து விவசாய பிரதிநிதிகளும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.