< Back
மாநில செய்திகள்
பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி

தினத்தந்தி
|
15 Nov 2022 6:45 PM GMT

Citizens attempt to block the road

வேளாங்கண்ணி:

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள விழுந்தமாவடி கிராமத்திற்கு சொந்தமான ஆற்றங்கரையில் விழுந்தமாவடி உள்நாட்டு மீனவர்களுக்கு சொந்தமான கொட்டகை உள்ளது. இந்த கொட்டகையில் அப்பகுதி மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் வைத்து பூட்டப்பட்டு இருந்தது. அந்த பூட்டை உடைத்து உள்ளே உள்ள மீன்பிடி உபகரணங்களை எடுத்து சென்றதாக விழுந்தமாவடி தலைமை நாட்டாண்மை பூமாலை மற்றும் உள்நாட்டு மீனவர் சங்க இயக்குனர் மாரியப்பன் ஆகியோர் கீழ்வேளூர் தாசில்தாரிடம் கேட்டுள்ளனர்.இதனால் பூமாலை மற்றும் மாரியப்பன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் விழுந்தமாவடியில் சாலை மறியல் போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். தகவல் அறிந்த நாகை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் கென்னடி மற்றும் கீழ்வேளூர் தாசில்தார் அமுதவிஜய் ரங்கன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இருவர் மீதும் போடப்பட்ட வழக்கை விசாரணை செய்து உண்மைத் தன்மை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். எடுத்துச்சென்ற மீன் பிடி உபகரணங்கள் திருப்பி கொடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

மேலும் செய்திகள்