திருப்பத்தூர்
பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
|Demonstration by BJP
திருப்பத்தூர் மாவட்டத்தில் பால் விலை, மின் கட்டண உயர்வைகண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் நகர பாரதீய ஜனதா கட்சி சார்பில் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழில் பிரிவு மாவட்ட தலைவர் பி.பிரேம்குமார் தலைமை தாங்கினார். தொழில்பிரிவு மாவட்ட செயலாளர் கோடீஸ்வரன், மாவட்ட துணை தலைவர்கள், மதன், திலிப்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ஆர்.சண்முகம் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் அன்பழகன், மாவட்ட பொதுச் செயலாளர் கண்ணன், மாநில எஸ்.டி. பிரிவு துணைத்தலைவர் ஐ.வி.எல்.கோவிந்தராஜ் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும், பால் விலை உயர்வு திரும்ப பெற கோரியும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதில் மாவட்ட துணை தலைவர் ஈஸ்வர், நகர பொதுச்செயலாளர் டி.வி.பார்த்திபன், மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் ராஜேஷ், நகர செயலாளர் மேகநாதன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொழில்பிரிவு நகர செயலாளர் டி.குமார் நன்றி கூறினார்.
திருப்பத்தூர் ேமற்கு
திருப்பத்தூர் மேற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் திருவண்ணாமலை-ஆலங்காயம் மெயின் ரோடு வெங்களாபுரத்தில் ஒன்றிய தலைவர் சிலம்பரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பிரபாகரன் வரவேற்றார். இதில் மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.விவேகானந்தன், கே.மாரிமுத்து தட்சிணாமூர்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய விவசாய அணி தலைவர் எஸ்.டி.ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.
ஆம்பூா்
திருப்பத்துா் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி ரோட்டில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் ஆவ்ப்பாட்டம் நடந்தது. பால் விலை உயர்வு, மின் கட்டணம் மற்றும் சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆம்பூர் நகர தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணைத் தலைவர் அன்பு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பால் விலை, மின் கட்டண் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி நகர பா.ஜ.க சார்பில் ஜின்னாசாலை மேம்பாலம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் வாசுதேவன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் முருகன், சிவக்குமார், சீனிவாசன், கார்த்திக், பிரதீப் உள்பட பலர் பேசினார்கள்.
ஆலங்காயம்
ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் முனியப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினர் க.சிவப்பிரகாசம், மருத்துவரணி பொறுப்பாளர் சற்குணபிரபு ஆகியோர் கலந்துக் கொண்டு பேசினார்கள்.