< Back
மாநில செய்திகள்
ராமநத்தத்தில்  வாகனம் மோதி தொழிலாளி பலி
கடலூர்
மாநில செய்திகள்

ராமநத்தத்தில் வாகனம் மோதி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
16 Nov 2022 12:15 AM IST

In Ramanatha Worker killed in vehicle collision

ராமநத்தம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள விக்கிரமங்களத்தை சேர்ந்தவர் புலவர் மகன் பாலமுருகன் (வயது 28). இவர் அரியலூரில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் ஒரு சரக்கு வாகனத்தில் பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு விழுப்புரத்தில் உள்ள ஒரு கடையில் இறக்கிவிட்டு மீண்டும் அதே வாகனத்தில் ஊருக்கு புறப்பட்டார். கடலூர் மாவட்டம் ராமநத்தத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது, இயற்கை உபாதை கழிப்பதற்காக சரக்கு வாகனத்தை விட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று, பாலமுருகன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா மற்றும் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்